எதிர்மறை எண்ணத்தை மாற்றும் கதை
ஒரு ஊரில் ஒரு அறிவாளி மனிதன் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி மிக அதிகம். அதனால் அவர் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு அடிக்கடி போய் கடவுளை தினமும் தரிசித்து வந்தார். அதன் பின் அவர் காட்டுக்கு வேலைக்கு போறது வழக்கம். ஏனென்றால் அவர் ஒரு விறகுவெட்டி. அவர் வெட்டியா விறகினை கொண்டு போய் கடையில் போட்டு அதில் வருகிற வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். இவரது குடும்பம் எப்போதுமே நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்து காணப்பட்டன.
ஒரு நாள் முன்பு போல அவர் காட்டுக்கு போகும் போது அங்கு ஒரு சில விஷயங்களை பார்த்தார். அந்த காட்டில் வாழும் ஒரு நரிக்கு முன்னங்கால் இரண்டும் இல்லை ஏதோ ஒரு விபத்தில் இழந்து விட்டது. அந்த நரி அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டு இருந்தது. இதனை பார்த்த அந்த அறிவாளி மனிதன் மனதில் நினைத்துக்கொண்டு இந்த நரிக்கு இரண்டு கால்களும் கிடையாது அப்படி இருக்கும் போது இது எப்படி வேட்டையாடி அதோட பசியை போக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தார்.
இப்படி அவர் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அந்தப் பக்கமாக ஒரு புலி ஒன்று வந்தது. அதனை பார்த்த உடனே அவர் பயந்து ஓடிப்போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிந்துக்கொண்டார். ஒளிந்துக்கொண்டு அங்கே என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தார். அந்த புலியானது வேட்டையாடி ஒரு பெரிய மானை அடித்து இழுத்துக்கொண்டு வந்து அதை ஒரு மரத்தடியில் வைத்து பசியாறும் வரைக்கும் எடுத்து சாப்பிட ஆரம்பித்தது. அந்தப் புலி சாப்பிட்டது போக மிச்சத்தை அந்த மரத்தடியிலேயே போட்டுவிட்டு சென்றது. அதன் பின் நடந்தது என்னவென்றால் புலி போனதுக்கு பிறகு அந்த காலில்லாத நரி மெதுவாக நகர்ந்து நகர்ந்து அந்த மரத்தை நோக்கி வந்தது அங்கே மிச்சமிருந்த மாமிசத்தை அது வயிறார சாப்பிட்டு திருப்தியாக போனது.
இந்த அனைத்து செயல்களையும் அந்த மரத்துக்கு பின்னாடி நின்று பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் யோசிக்கிறார் இரண்டு கால்களும் இல்லாத ஒரு வயசான நரிக்கு கடவுள் சாப்பாடு போடுகிறார். தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வரும் நமக்கு சாப்பாடு போடாமல் விட்டுவிடுவாரா கடவுள். நமக்கு கடவுள் பக்தி அதிகம் எதற்கு அனாவசியமாக வெயிலலையும் மழையிலலையும் கஷ்டப்பட வேண்டும். எதுக்காக வியர்வை சிந்தி விறகுவெட்டும் வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு கொஞ்ச நாட்கள் சென்றன.
அவன் விறகு வெட்ட போவதில்லை. அவன் விறகுவெட்ட கையில் வைத்திருந்த கோடாலியும் தூக்கி போட்டு பேசாமல் ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்தான். அவன் கோயிலுக்கு மட்டும் போயிட்டு வருவான். கடவுள் என்னை பார்த்துக்கொள்வார்; கடவுள் என்னை காப்பாற்றுவார்; அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டையும் கொடுப்பார் என்று நினைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு கோயில் மண்டபத்திலேயே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தார்.
ஒவ்வொரு நாளும் இப்படியே போய்க்கொண்டு இருந்தது சாப்பாடு வந்தபாடில்லை. பசி தாங்க முடியாமல் வாடி போகிறார்; உடம்பு இளைத்து எலும்பு தோலுமாக ஆயிட்டான். ஒரு நாள் ராத்திரி நேரம் கோயிலில் யாரும் இல்லை. இவர் மெதுவாக கண்ணை திறந்து கடவுளை பார்த்தார். கடவுளே என்னுடைய பக்தி மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் இப்படிப் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான். காட்டில் உள்ள அந்த நரிக்கு புலி மூலமாக சாப்பாடு போட்டியே அதை பார்த்து தானே நான் இங்கு வந்தேன். கடவுளே என்னை ஏன் இப்படி சோதனை செய்கிறாய் இது நியாயமா என்று சொல்லி கடவுளை பார்த்து கேட்கிறார்.
அந்த கடவுளே மெதுவாக தன்னுடைய கண்ணை திறந்து சொன்னது. அட முட்டாளே!, நீ பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது காலில்லாத நரியிடம் இல்லை அந்த புலி கிட்ட இருந்தே என்று சொன்னது. புலி மாதிரி சாப்பிட்டு மீதம் முடியாதவங்க அதாவது இயலாதவர்களுக்கு தானமாக கொடு என்று சொன்னது. நாம் யாரிடம் இருந்து பாடம் கற்றுக்க்கொள்ள வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் வெற்றிக்கு காரணம் கடவுள் மட்டும் கிடையாது உங்களுடைய உழைப்பும்; விடாமுயற்சியும் வாழ்வில் நடக்கிற வெற்றிக்கு காரணம் என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.
Related Tags
எதிர்மறை எண்ணத்தை மாற்றும் கதை | Short Stories With Moral | Short Motivational Stories With Moral | Moral Stories In Tamil To Read | Moral Stories For Kids In Tamil | Motivational Stories With Moral | Short Story In Tamil | Famous Tamil Short Stories | Moral Stories In Tamil For Students | Moral Stories In Tamil For College Students | New Moral Stories In Tamil | Small Story In Tamil | Best Moral Story In Tamil | Lesson Moral Stories | Moral Short Stories | Moral Lesson Stories | Moral Inspirational Stories.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.